கைகளைப்பிடித்து
காலங்களை மறந்து
உன்னோடு பயணித்த
பொழுதுகளில்
மெதுவாகத்தான் சுற்றியது 'பூமி'
கனவுகளில் வந்து என்னை நீ
களவாடிக்கொண்டிருந்த காலங்களில்
மெதுவாகத்தான் புலர்ந்தது 'வானம்',
ஏதோஒரு நிர்பந்தந்தால்
நாம் பிரியவேண்டிய சூழலில் மட்டும்
மிக வேகமாக பிரிந்தது மூச்சுக்காற்று .....
-தாமோதரன்